Social Icons

Pages

Wednesday 9 November 2016

How to exchange 1000 and 500 Rupees | 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றுவது எப்படி


நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ. 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

பழைய நோட்டுகளை ரூ.4000 வரை மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும்போது அடையாள அட்டை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்றவற்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில்,

1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன?
பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

4. அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக் கொள்ள முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் தனி ஒரு நபர் ரூ.4,000 மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

5. முழுத் தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாதா?
தற்போதைய திட்டப்படி, முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை.

6. 4 ஆயிரம் ரூபாய் எனக்குப் போதாது என்றால் நான் என்ன செய்வது?
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங்கில் டிரான்சாக்ஷன்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

7. வங்கிக் கணக்கு இல்லை என்றால்?
வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.

8. ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர், வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

9. பணத்தை மாற்றிக் கொள்ள எங்கே செல்ல வேண்டும்?
ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

10. என்னுடைய வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?
ரூ.4 ஆயிரம் வரை பணத்தை மாற்றிக் கொள்ள எந்த வங்கிக் கிளைக்கும், அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.4 ஆயிரத்துக்கும் மேலான தொகையை மாற்றிக் கொள்ள, வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ அல்லது வங்கியின் பிற கிளைக்கோ தான் செல்ல வேண்டும்.

No comments:

 
Blogger Templates